தமிழக அரசில் 2299 கிராம உதவியாளர் பணியிடங்கள்; குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும்!
தமிழக அரசின் வருவாய் துறையில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் மொத்தம் 2299 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
தமிழகத்தில் காலியாக உள்ள 2299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி தற்போது விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
கிராம உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 2299
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதியிருக்க வேண்டும். தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். மிதிவண்டி அல்லது இருசக்கர வாகனம் இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: பொதுப்பிரிவினர் 21 முதல் 32 வயதிற்குள் இருக்க இதர பிரிவினர் 37 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ 11,100 - 35,100
தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு மிதிவண்டி அல்லது இருசக்கர வாகனம் ஓட்டும் திறன், வாசித்தல், எழுதும் திறன் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
இந்தப் பணியிடங்களுக்கு அந்தந்த வட்டத்தில் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். எனவே உங்களுடைய மாவட்ட இணையதளப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளவும்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அந்தந்த மாவட்ட இணையதளப் பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து சம்பந்தபட்ட தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.08.2025
இது தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய அந்தந்த மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்புகளைப் பார்வையிடவும்
.jpg)
Comments
Post a Comment