எய்ம்ஸ் மருத்துவமனைகளில் செவிலியர் வேலை; 3,500 காலிப்பணியிடங்கள்..!புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மட்டும் 446 காலிப்பணியிடங்கள் உள்ளன




17 எய்ம்ஸ் மருத்துவமனைகள், புதுச்சேரி ஜிப்மர், டெல்லி இஎஸ்ஐசி மற்றும் இதர மத்திய அரசு மருத்துவமனைகளில் உள்ள செவிலியர் பணியிடங்களுக்கு தற்போது விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளது.


மொத்தமுள்ள 3,500 காலிப்பணியிடங்களில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மட்டும் 446 காலிப்பணியிடங்கள் உள்ளன.


வயது வரம்பு

செவிலியர் பணியிடங்களுக்கு 18 முதல் 30 வயது வரை இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள் வரையும், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் வரையும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 வருடங்கள் வரையும் வயது வரம்பில் தளர்வு உள்ளது.


கல்வித்தகுதி

செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இளங்கலை நர்சிங் பட்டப்படிப்பு அல்லது நர்சிங் . (Hons.) பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும் (அல்லது) Post Certificate நர்சிங்/ Post Basic நர்சிங் ஆகியவற்றை முடித்திருக்க வேண்டும். மேலும் இந்திய நர்சிங் கவுன்சில்/ நர்ஸ் & மிட்வைஃப் பதிவு செய்திருக்க வேண்டும்.


இவையில்லாமல், ஜென்ரல் நர்சிங் டிப்ளமோ முடித்து பதிவு செய்திருக்க வேண்உம். மேலும் 50 படுக்கைகள் வரை கொண்ட மருத்துவமனைகளில் குறைந்தபட்சம் 2 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


சம்பள விவரம்

செவிலியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.9,300 முதல் ரூ.34,800 வரை சம்பளம் வழங்கப்படும்.


தேர்வு செய்யப்படும் முறை

எய்ம்ஸ் மருத்துவமனை செவிலியர் பணியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத்தேர்வு என இரண்டு கட்ட தேர்வு முறை பின்பற்றப்படுகிறது. இதில் முதல்நிலைத் தேர்வு தகுதித் தேர்வு மட்டுமே. 100 கேள்விகளுக்கு தேர்வு நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் முதன்மைத் தேர்விற்கு தகுதி அடைவார்கள். முதன்மைத் தேர்வு 160 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின்பு பணி நியமனம் வழங்கப்படும்.


விண்ணப்பிப்பது எப்படி?

மத்திய அரசின் கீழ் செவிலியர் பணியிடங்க்ளுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.aiimsexams.ac.in/ என்ற இணையதளத்தில் ஆன்லின் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.3000 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/ பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ரூ.2,400 செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது. இதில் தேர்வை எழுதும் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் திரும்பி அளிக்கப்படும்.


இதற்கான விண்னப்பங்கள் ஆன்லைன் வழியாக பெறப்படும் நிலையில், ஆகஸ்ட் 11 வரை விண்ணப்பிக்கலாம். முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் 14-ம் தேதியும், முதன்மைத் தேர்வு செப்டம்பர் 27-ம் தேதியும் நடத்தப்படும்.


முக்கிய நாட்கள்


விவரம் தேதிகள்

விண்ணப்பிக்க கடைசி நாள் 11.08.2025

முதல்நிலைத் தேர்வு 14.09.2025

முதன்மைத் தேர்வு 27.09.2025

செவிலியர் படிப்பை முடித்து அரசு பணிக்கான வாய்ப்பை எதிர்பார்ப்பவர்கள் இதனைப் பயன்படுத்திக்கொண்டு தேர்வை எழுதலாம். தேர்விற்கான பாடத்திட்டம் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog