சிபிஎஸ்இ 10 , 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் வெளியீடு





ஒவ்வொரு ஆண்டும் சிபிஎஸ்இ கீழ் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்தாண்டு முதல் 10-ம் வகுப்பிற்கு இரண்டு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.


10-ம் வகுப்பிற்கு துணைத்தேர்வு கிடையாது. 12-ம் வகுப்பிற்கு வழக்கம் போல் பொதுத்தேர்வு மற்றும் துணைத் தேர்வு நடைபெற உள்ளது. மேலும் 12-ம் வகுப்பு விளையாட்டு வீரர்களுக்கு தனித்தேர்வு நடைபெறும். தேர்விற்கு மாணவர்கள் திட்டமிட்டு தயாராகும் வகையில், ஆசிரியர்கள் பாடங்களை விரைவாக முடித்து தேர்விற்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் இந்தாண்டு உத்தேச அட்டவணை வெளியிடப்படுவதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.


இந்தாண்டு பொதுத்தேர்வை இந்தியா மட்டுமின்றி 26 நாடுகளில் இருந்து சுமார் 44 லட்சம் மாணவர்கள் எழுதுவார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. மொத்தம் 204 பாடங்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது.


10-ம் வகுப்பிற்கு முதல் பொதுத்தேர்வு 2026 பிப்ரவரி 17 முதல் தொடங்கி மார்ச் 9- வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

12-ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு 2026 பிப்ரவரி 17 முதல் தொடங்கி ஏப்ரல் 9 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

10-ம் வகுப்பு இரண்டாம் பொதுத்தேர்வு 2026 மே 15 முதல் ஜூன் 1 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அனைத்து தேர்வுகளும் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடைபெறும்.


சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு உத்தேச பொதுத்தேர்வு அட்டவணை 2026

தேதி பாடம்

17.02.2025 கணிதம்

21.02.2025 ஆங்கிலம்

23.02.2025 பிரெஞ்சு

24.02.2025 தமிழ்

25.02.2025 அறிவியல்

27.02.2025 கணினி பயன்பாடு, ஏஐ, தகவல் தொழில்நுட்பம்

28.02.2025 சமஸ்கிருதம்

02.03.2025 இந்தி

07.03.2025 சமூக அறிவியல்


சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு உத்தேச பொதுத்தேர்வு அட்டவணை 2026

தேதி பாடம்

17.02.2025 பயோடெக்னாலஜி

18.02.2025 உடற்கல்வி

20.02.2025 இயற்பியல்

21.02.2025 வணிக நிர்வாகம்

26.02.2025 புவியியல்

28.02.2025 வேதியியல்

09.03.2025 கணிதம்

12.03.2025 ஆங்கிலம்

14.03.2025 வீட்டு அறிவியல்

16.03.2025 இந்தி

17.03.2025 தமிழ்

18.03.2025 பொருளாதாரம்

23.03.2025 அரசியல் அறிவியல்

25.03.2025 கணினி அறிவியல்

27.03.2025 உயிரியல்

28.03.2025 கணக்கியல்

30.03.2025 வரலாறு

08.04.2025 பிரெஞ்சு

09.04.2025 சமஸ்கிருதம்


சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு இரண்டாம் பொதுத்தேர்வு உத்தேச அட்டவணை 2026

தேதி பாடம்

15.05.2025 கணிதம்

19.05.2025 அறிவியல்

22.05.2025 சமூக அறிவியல்

26.05.2026 மொழிப்பாடம்

30.05.2026 மொழிப்பாடம்

தற்போது வெளியிட்டுள்ள பொதுத்தேர்வு அட்டவணை உத்தேச அடிப்படையில் வெளியிடப்பட்டவையே ஆகும். நாடு முழுவதும் பள்ளிகளிடம் இருந்து மாணவர்களின் இறுதி பட்டியல் பெற்ற பின்னர் இறுதி அட்டவணை வெளியிடப்படும் என சிபிஎஸ்இ குறிப்பிட்டுள்ளது.


Comments

Popular posts from this blog