தமிழ்நாடு மின்சார வாரிய வேலை வாய்ப்பு; 1794 பணியிடங்கள்; விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.10.2025





தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வில் அடங்கிய தொழிற்பயிற்சி நிலை பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


இதன் மூலம் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் 1794 கள உதவியாளர் (Field Assistant) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 02.10.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.


கள உதவியாளர்


காலியிடங்களின் எண்ணிக்கை: 1794


கல்வித் தகுதி: எலக்ட்ரீசியன் (Electrician) அல்லது ஒயர்மேன் (Wireman) அல்லது எலக்ட்ரிக்கல் (Electrical) பிரிவில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.


சம்பளம்: ரூ. 18,800 - 59,900


வயதுத் தகுதி: 01.07.2025 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். எம்.பி.சி (MBC-DNC), பி.சி (BC), பி.சி.எம் (BCM) பிரிவினர் 34 வயது வரையிலும், எஸ்.சி (SC), எஸ்.சி.ஏ (SC(A)), எஸ்.டி (ST) பிரிவினர் 37 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.


தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


எழுத்துத் தேர்வு 2 தாள்களாக நடைபெறும். முதல் தாளில் தமிழில் 100 வினாக்களும், பொது அறிவில் 75 வினாக்களும், திறனறி பிரிவில் 25 வினாக்களும் கேட்கப்படும். இதில் தமிழ் பகுதி, தகுதித் தேர்வு மட்டுமே.


இரண்டாம் தாளில் சம்பந்தப்பட்ட பிரிவில் இருந்து 200 கேள்விகள் கேட்கப்படும். இரண்டு தாள்களுக்கும் தலா 3 மணி நேரம் கால அளவு வழங்கப்படும்.


விண்ணப்பக் கட்டணம்: ரூ. 150, இருப்பினும் ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.


தேர்வுக் கட்டணம்: ரூ.100


விண்ணப்பம் செய்வது எப்படி?


விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.


ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்கலாம். நிரந்தரப்பதிவு வைத்திருப்பவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.


இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் கையொப்பம் ஆகியவற்றை ஆணையம் அறிவித்துள்ள அளவு மற்றும் பார்மட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.


மேலும், தங்களது கல்வி மற்றும் பிறச் சான்றிதழ்களை கையில் வைத்துக் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். உங்களது அனைத்து விவரங்களையும், சரியாக உள்ளிட்டு விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தி, சமர்ப்பிக்க வேண்டும். சமர்பிக்கப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, சேமித்து வைத்துக் கொள்ள  விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.10.2025

Comments

Popular posts from this blog