டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு.. ஆப்சென்ட் மட்டும் இத்தனை பேரா? தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியிடப்படும்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு (TNPSC Group 2 Exam) இன்று தமிழகம் முழுக்க பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்றது.
தேர்வுக்கு 5.53 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில், இந்த தேர்வை 4,18,791 பேர் எழுதியதாகவும், 1,34,843 பேர் தேர்வு எழுத வரவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்டவை தொடர்பான கேள்விகளும் இந்த தேர்வில் கேட்கப்பட்டு இருந்தன. இன்று நடைபெற்ற தேர்வை சுமார் 75 சதவீதம் பேர் எழுதியிருப்பதால், ஒரு இடத்திற்கு கிட்டத்தட்ட 650 பேர் போட்டி போடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
குரூப் 2 தேர்வு
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணையம் நிரப்பி வருகிறது. குரூப் 1, 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் இந்த தேர்வுகள் நடத்தப்படுகிறது.
அந்த வகையில், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சிறப்பு பிரிவு உதவியாளர், வனவர், கண்காணிப்பாளர் உள்ளிட்ட 645 பணியிடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி சார்பில், குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் இன்று நடைபெற்றது. தமிழகம் முழுவதும் மொத்தம், 1,905 தேர்வு மையங்களில் இந்த குரூப் 2 முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது.
75.64 சதவீதம் பேர் எழுதினர்
தேர்வுக்கு 5.53 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில், இந்த தேர்வை 4,18,791 பேர் எழுதியதாகவும், 1,34,843 பேர் தேர்வு எழுத வரவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, பார்த்தால் 75.64 சதவீதம் பேர் தேர்வை எழுதியுள்ளனர். இன்று நடைபெற்ற குரூப் 2, 2 ஏ தேர்வில் தமிழ் பகுதி மிகவும் எளிதாக இருந்ததாக தேர்வர்கள் பலரும் கூறியதை பார்க்க முடிந்தது.
அதே நேரத்தில், கணிதம் மற்றும் திறனறிவு பகுதிகள் கொஞ்சம் கடினமானதாக இருந்ததாகவும் தேர்வர்கள் சிலர் கூறியதை பார்க்க முடிந்தது. குரூப் 2, 2 ஏ தேர்வை பொறுத்தவரை இன்று நடைபெற்றது, முதல் நிலை தேர்வு ஆகும். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மை தேர்வு எழுத வேண்டியிருக்கும்.
தமிழக அரசு திட்டங்கள் கேள்வி
குரூப் 2, 2 ஏ தேர்வர்கள் காலை 9 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வர வேண்டும் என்று டின்பிஎஸ்சி அறிவுறுத்தியிருந்தது. இதன்படி, இன்று காலை 9 மணிக்கு தேர்வு மையங்களின் கதவுகள் மூடப்பட்டன. ஒரு சில தேர்வு மையங்கள் தாமதமாக வந்த தேர்வர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதையும் பார்க்க முடிந்தது.
தேர்வு காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடந்து முடிந்தது. இன்று நடைபெற்ற தேர்வில் 200 வினாக்களுக்குக் 150 வினாக்களுக்கு சரியான விடை அளித்தவர்கள் அடுத்த கட்ட தேர்வான முதன்மை தேர்வுக்கு ரெடியாகலாம் என்று பல்வேறு தரப்பினரும் கூறியதை பார்க்க முடிந்தது. இன்று நடைபெற்ற தேர்வில் வழக்கம் போல தமிழக அரசின் திட்டங்கள் குறித்த வினாக்களும் இடம் பெற்று இருந்ததை பார்க்க முடிந்தது.
மகளிர் உரிமைத் தொகை பற்றி கேள்வி
மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்டவை தொடர்பான கேள்விகளும் இருந்தன. இன்று நடைபெற்ற தேர்வை சுமார் 75 சதவீதம் பேர் எழுதியிருப்பதால் ஒரு இடத்திற்கு கிட்டத்தட்ட 650 பேர் போட்டி போடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற தேர்வுக்கான ரிசல்ட் டிசம்பர் மாதத்திற்குள் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.
குரூப் 2 ரிசல்ட் எப்போது?
இது தொடர்பாக பிரபாகர் கூறியதாவது: - "குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து முதன்மைத் தேர்வுகள் 2026 மார்ச் மாதம் நடைபெறும். டிஎன்பிஎஸ்சி இந்த ஆண்டு 7 அறிவிப்புகளை வெளியிட்டது. அதில் 6 தேர்வுகள் நடத்தப்பட்டுள்ள நிலையில், குரூப் 4 ஏ பணியிடங்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.
குரூப் 4 பணியிடங்களில் 3,935 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன. நேற்று கூடுதலாக 727 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 4,662 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இவர்களுக்கான தேர்வு முடிவு அக்டோபர் மாதம் வெளியிடப்படும். 2026 ஆம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி-யின் கால அட்டவணை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அது டிசம்பர் மாதத்திற்குள் வெளியிடப்படும்" என்றார்.
.jpg)
Comments
Post a Comment