10, 12 பொதுத் தேர்வுக்கான கால அட்டவணை நவ.4ல் வெளியீடு?
தமிழகத்தில் 10, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகால அட்டவணை அக்டோபரில் வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தயாரிப்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டதால் பொதுத்தேர்வுக்கான அட்டவணை வரும் நவம்பர் முதல் வாரத்தில் வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து தேர்வுத்துறை அதிகாரிகள் கூறும்கையில், ''அட்டவணை தயாரிப்பு பணிகள் முடிந்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும், நவ.4ல் வெளியிட திட்டமிட்டுள்ளோம். அடுத்தாண்டு நடைபெறும் தேர்தலை கருத்தில் கொண்டு தேர்வு தேதிகள் தயாரிக்கப்பட்டுள்ளன" என்றனர்
.gif)
Comments
Post a Comment