அரசு கல்லூரிகளில் 2,708 பணியிடங்கள்... ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2,708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு Annexure-IV, Annexure-V, Annexure-VI அனுபவச் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளில் 2,708 உதவிப் பேராசிரியர்கள் காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் - பணியனுபவச் சான்று பதிவேற்றம் செய்தல் தொடர்பான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பதவிக்காக ஏற்கனவே விண்ணப்பித்துள்ள, விண்ணப்பிக்கும் நிலையிலுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் பணியனுபவச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டிய தேவையை கருத்தில் கொண்டு கல்லூரிக் கல்வி ஆணையரின் தெளிவுரையின்படி கீழ்க்கண்டவாறு பிற்சேர்க்கை (Addendum) வெளியிடப்படுகிறது.
.webp)
Comments
Post a Comment