டிஎன்பிஎஸ்சி 2026.. குரூப் தேர்வுகள் கால அட்டவணை எப்போது? விரைவில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு




குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் உள்ள பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி நிரப்பி வருகிறது.


தேர்வர்கள் தேர்வுகளுக்கு முன்கூட்டியே தயாராகும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டிலேயே என்னென்ன தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பதை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2026 ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி ஆண்டு தேர்வு அட்டவணை விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


அரசு பணிகளுக்கு தேர்வாகி வரும் பல லட்சக்கணக்கான தேர்வர்களுக்கு கலங்கரை விளக்கமாக இருப்பது டிஎன்பிஎஸ்சிதான். நன்றாக படித்து போட்டித்தேர்வில் வெற்றி பெற்றால் போதும். வேலை நிச்சயம்.. 10 பைசா பணம் தர தேவையில்லை.


டிஎன்பிஎஸ்சி ஆண்டு தேர்வு அட்டவணை


படித்து வெற்றி பெற்றால் அரசு வேலை 100 சதவீதம் உறுதி என்பதால், கிராமப்புற ஏழை எளிய தேர்வர்களுக்கு அரசு வேலை கிடைக்கும் வாய்ப்பை உறுதி செய்வது தமிழக அரசு பணியாளர் தேர்வு ஆணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சிதான். டிஎன்பிஎஸ்சியை பொறுத்தவரை குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் உள்ள பணியிடங்களை உரிய அறிவிப்புகளை வெளியிட்டு நிரப்பி வருகிறது.


தேர்வர்கள், தேர்வுகளுக்கு முன்கூட்டியே தயாராகும் வகையில், அடுத்த ஆண்டு என்னென்ன தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பதை முந்தைய ஆண்டு இறுதியில் வெளியிடும் வழக்கத்தை டிஎன்பிஎஸ்சி கடைபிடித்து வருகிறது. அதாவது ஒவ்வொரு ஆண்டும் இறுதியில் அடுத்த ஆண்டுக்கான ஆண்டு கால அட்டவணையை டிஎன்பிஸ்சி வெளியிடுகிறது.


எப்போது வெளியாகும்?


Annual Planner எனப்படும் 2026-க்கான தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு முடிவடையை சரியாக இன்னும் ஒரு மாதமே உள்ளது. இதனால் இந்த ஆண்டு கால அட்டவணை எந்த நேரத்தில் வேண்டும் என்றாலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே வருடாந்திர கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. குருப்-1 தேர்வு, குருப்-4, தேர்வு ஒருங்கிணைந்த குருப்-2 மற்றும் 2-ஏ தேர்வு, ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான தேர்வு உள்பட மொத்தம் 7 தேர்வுகள் இடம் பெற்று இருந்தன. இதனால், இந்த ஆண்டு நவம்பர் மாதமே வெளியாகலாம் என்று எதிர்பார்த்த தேர்வர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.


டிஎன்பிஎஸ்சி தலைவர் பேச்சு


எனினும், ஆண்டு இறுதிக்கு முன்பாக வெளியிட வேண்டும் என்பதால், விரைவில் இதற்கான அறிவிப்பை தேர்வர்கள் எதிர்பார்த்து உள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர், 2026 ஆம் ஆண்டு தேர்வு அட்டவணை தயாரிக்கும் பணி முடிவு பெறும் நிலையில் உள்ளது. எனவே, குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 தேர்வுகளுக்கான அறிவிப்புகளுடன் விரைவில் வெளியாகும் என்று தெரிவித்தார். இதனால், எந்த நேரத்திலும் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது.

Comments

Popular posts from this blog