முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியீடு.




1996 காலிப்பணியிடங்களுக்கான  முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பதவிக்கான அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 10.07.2025 அன்று வெளியிடப்பட்டது. அதன்படி, மாநிலம் முழுவதும் கடந்த அக்டோபர் மாதம் 12ம் தேதி தேர்வுகள் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து  தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண் மற்றும் இனச் சுழற்சி அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியல் பாடவாரியாக ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில்  வெளியாகியது.


சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ள பணிநாடுநர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்பு கடிதம், சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்வதற்கான வழிமுறைகள் ஆகியவை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



அழைப்புக் கடிதம் பிற வழிகளில் அனுப்பி வைக்கப்படமாட்டாது எனவும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கான இடம் மற்றும் தேதி ஆகியவை சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அழைப்புக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.


சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்புக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டவாறு தங்களது அனைத்து (அசல் சான்றிதழ்கள் மற்றும் பிற ஆவணங்களுடன் (ii) அதனுடைய Self Attested Copies. (iii) ஆளறிச் சான்றிதழ், (iv) சுயவிவரப் படிவம் மற்றும் (v) Candidate Declaration ஆகியவற்றினை இரு நகல்களில் (Two Copies) சான்றிதழ் சரிபார்ப்பின்போது கொண்டு வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பிற்கு குறிப்பிட்ட தேதியில் நேரில் வருகை புரியாத விண்ணப்பதாரர்கள் தகுதியான மதிப்பெண் பெற்றிருப்பினும், அடுத்தக்கட்ட பணித் தெரிவிற்கு பரிசீலிக்கப்படமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் தொடர்பான கோரிக்கைகளை trbgrievances@tn.gov.in என்ற ஆசிரியர் தேர்வு வாரிய மின்னஞ்சல் முகவரிக்கு பட்டியல் வெளியிடப்பட்ட நாள் முதல் மூன்று தினங்களுக்குள் அனுப்புலாம் எனவும் கோரிக்கை மனுக்கள் பிற வழியில் அனுப்பினால் பரிசீலிக்கப்படமாட்டாது எனவும் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog