CTET 2026 தேர்வு விண்ணப்பம் தொடக்கம்; விண்ணப்பிக்க முழு விவரம்
சிபிஎஸ்இ நடத்தும் சிடெட் தேர்வு (CTET) 2026 வரும் பிப்ரவரி 8-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இத்தேர்விற்கான ஆன்லைன் விண்ணப்பம் தற்போது தொடங்கியுள்ளது.
ஆசிரியர் தகுதிப் பெற விரும்புகிறவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திகொண்டு விண்ணப்பிக்கலாம்.
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு 2026
இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 கீழ் 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஆசிரியராக பணியாற்ற தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாகும். அந்த வகையில், மாநிலங்களில் அளவில் டெட் (TET) தேர்வும், மத்திய அரசு பள்ளிகளுக்கு சிடெட் (CTET) தேர்வும் நடத்தப்படுகிறது. சிடெட் தேர்வை சிபிஎஸ்இ நடத்தி வருகிறது.
CTET தேர்விற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
சிடெட் முதல் தாள் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க ஆசிரியர்களுக்காக நடத்தப்படுகிறது. அதே போன்று, இரண்டாம் தாள் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை கற்பிக்க உள்ள ஆசிரியர்களுக்கு ஆகும்.
முதல் தாளை 2 வருட டிப்ளமோ, 4 வருட B.El.Ed, 50 சதவீத மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு மற்றும் B.Ed முடித்தவர்கள் மற்றும் சிறப்பு கல்விக்கான டிப்ளமோ முடித்தவர்கள் எழுதலாம்.
இரண்டாம் தாளை பட்டப்படிப்புடன் B.Ed தகுதி பெற்றவர்கள் அல்லது இறுதி ஆண்டில் இருப்பவர்கள் எழுதலாம். NCTE விதிமுறைகளின் அடிப்படையில் கல்வித்தகுதி நிர்ணயிக்கப்படுகிறது. https://ncte.gov.in/ என்ற இணையதளத்தில் கூடுதல் தகவல்களை அறிந்துகொள்ளலாம்.
ஒருவர் இரண்டு தாள்களையும் எழுதலாம். காலை மற்றும் பிற்பகல் என இரண்டு தாள்களும் ஒரே நாளில் நடைபெறும்.
தேர்வு முறை என்ன?
முதல் தாள் - குழந்தைகள் மேம்பாடு, கணிதம், சுற்றுச்சூழல் கல்வி, 2 மொழி பகுதிகள் கொண்டு 150 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.
இரண்டாம் தாள் - குழந்தைகள் மேம்பாடு, கணிதம் மற்றும் அறிவியல்/ சமுக அறிவியல், 2 மொழி பகுதிகள் கொண்டு 150 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.
20 மொழிகள் தேர்விற்கு இடம்பெறும். தேர்வர்களின் விரும்ப மொழிகளை தேர்வு செய்துகொள்ளலாம்.
எப்படி விண்ணப்பிப்பது?
சிடெட் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://ctet.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தேர்விற்கான கட்டணமாக ஒரு தாளுக்கு ரூ.1000 செலுத்த வேண்டும். இரண்டு தாளுக்கும் என்றால் ரூ.2000 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.500 மற்றும் ரூ.600 செலுத்த வேண்டும்.
படி 1 : சிபிஎஸ்இ-யின் சிடெட் இணையதளத்திற்கு செல்லவும்.
படி 2 : அதில் apply for CTET Feb 2026 என இருப்பதை கிளிக் செய்யவும்.
படி 3 : தொடர்ந்து, New Registration என்பதை கிளிக் செய்து, பதிவு செய்யவும்.
படி 4 : விவரங்களை அளித்து, தேர்வர்களின் புகைப்படம் மற்றும் கையோப்பம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
படி 5 : இறுதியாக கட்டணத்தை செலுத்தி விண்ணப்பித்தை சமர்பிக்க வேண்டும். பின்னர் அதனை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
சிடெட் 2026 தேர்விற்கான முக்கிய நாட்கள்
விவரம் தேதிகள்
விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள் 27.11.2025
விண்ணப்பிக்க கடைசி நாள் 18.12.2025
தேர்வு தேதி 08.02.2025 - தாள் 1 காலை 09.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை,
தாள் 2 பிற்பகல் 02.30 மணி முதல் 5 மணி வரை
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பிக்க ஆர்வமாக ஆசிரியர்கள் மேல் கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தில் உரிய தகவல்களுடன் இறுதி தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். தேர்விற்கான பாடத்திட்டம் மொழி வாரியாக இணையதளத்தில் தகவல் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது. தேர்விற்கு முன்பு அட்மிட் கார்டு வெளியிடப்படும்.

Comments
Post a Comment