Posts

Showing posts from December, 2021
Image
  முதுகலை பட்டதாரி போட்டி தேர்வு ஜனவரி 29 முதல் பிப்ரவரி 6 வரை நடத்த திட்டம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
  2020-21 கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் புதிய மாணவர்களின் சேர்க்கை குறித்த விவரம்.! பள்ளிக்கல்வித்துறை தகவல் நடப்பு கல்வி ஆண்டில் மட்டும் 6.73 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2020-21 கல்வி ஆண்டில் அதற்கு முந்தைய கல்வியாண்டை விட 1,28,000 மாணவர்கள் கூடுதலாக, அரசுப் பள்ளியில் சேர்ந்த நிலையில், நடப்புக் கல்வி ஆண்டில் மொத்தம் 6.73 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மாணவர்களுக்கான கற்றல் சூழ்நிலை மற்றும் உயர் கல்வி சேர்க்கையில் ஏற்படும் பாதிப்பு போன்றவை காரணமாகத் தொடர்ந்து, அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்தது. இதனால் பல இடங்களில் அரசுப்பள்ளிகள் மூடப்படும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் கொரோனோ பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார சுமையினால் பல பெற்றோர் தங்களின் குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்த்துள்ளனர். அதன்படி, அரசுப் பள்ளிகளில் நடப்பு 2021-2022ஆம் கல்வி ஆண்டில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. கடந்த...
  ஆசிரியா்களுக்கு விருப்பத்தின் பேரில் காப்பாளா் பணி: ஜன.6 முதல் 5 நாள்களுக்கு கலந்தாய்வு ஆதிதிராவிடா் நலத் துறையின்கீழ் 1,138 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து நிலை ஆசிரியா்களுக்கும் விருப்பத்தின் அடிப்படையில் பொது மாறுதல் கலந்தாய்வு தற்போது இணையவழியில் நடைபெற்று வருகிறது. இந்த கலந்தாய்வு முடிந்த பின்னா், பட்டதாரி ஆசிரியா்களின் பாடவாரியான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அடிப்படையில், விடுதிகளில் பணிபுரியும் காப்பாளா்கள் விருப்பத்தின்படி, ஆசிரியா் காலிப்பணியிடங்களுக்கும், பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள் காலியாக உள்ள காப்பாளா் பணியிடங்களுக்கும் மாறுதல் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கலந்தாய்வு வரும் ஜன.6-ஆம் தேதி தொடங்கி 10-ஆம் தேதி வரை சென்னை ஆதிதிராவிடா் நல ஆணையத்தில் நடைபெறவுள்ளது. இதில் பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளாதவா்களும் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  TRB வளாகத்தில் PG தேர்வர்கள் இன்று ( 29.12.2021 ) போராட்டம்.   TRB வளாகத்தில் இன்று 50 க்கும் மேற்பட்ட தேர்வர்கள் போராட்டம் நடத்தினர். தேர்வர்கள் கோரிக்கை : நாங்கள் 2018-19 PGTRB தேர்வு எழுதி தேர்ச்சி அடைந்து தகுதியான மதிப்பெண்கள் பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டோம். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணி வாய்ப்பு எங்களுக்கு மறுக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறோம் எங்களுடன் தேர்வு எழுதியவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே ( 11.02.2020 ) பணியமர்த்தப்பட்டு பணியாற்றி வருகின்றனர் ஆனால் எங்களுக்கு பணிவாய்ப்பு மறுக்கப்பட்டதால் நாங்கள் நீதிமன்றம் நாடி நீதிமன்ற உத்தரவு பெற்றதால் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 16.11.2021 அன்று வெளியிடப்பட்ட Revised Provisional Selection List ல் நாங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளோம். தாங்கள் கருணையுள்ளம் கொண்டு , மூன்றாண்டுகளாக பணி இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக் கொண்டிருக்கு எங்களுக்கு பணிநியமன கலந்தாய்வு விரைவில் நடத்தி எங்களை பணியமர்த்தி எங்களின் வாழ்வாதாரத்தை மீட்டுத் தரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் என தேர்வர்கள் தெரிவி...
  30.12.2021 அன்று மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்! முதுகலை ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 30.12.2021 பிற்பகல் 2.00 மணியளவில் EMIS இணையதளத்தில் வழியாக நடைபெறவுள்ளதால் சுழற்சிப் பட்டியலில் உள்ள முதுகலை ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களையும் பதவி உயர்வு கலந்தாய்வில் கலந்து கொள்ள தெரிவிக்குமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிது.  மேலும் சுழற்சிப்பட்டியலில் உள்ள உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களின் EMIS பள்ளியின் UDISE முதுகலை ஆசிரியர்கள் மற்றும் ID No. மற்றும் அவர்கள் பணிபுரியும் No ஆகியவற்றை உடனடியாக widsetn@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது.
  ஆசிரியர்கள் இடமாறுதல் பொது கலந்தாய்வு குறித்த அறிவிப்பு இரண்டு நாட்களில் வெளியாகும் - பள்ளிக் கல்வி அமைச்சர் இன்னும் இரண்டு நாட்களில் ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான கவுன்சிலிங் அறிவிப்பு வெளியிடப்படும் என பள்ளிக் கல்வி அமைச்சர் தெரிவித்தார். கலந்தாய்வு முடிந்த உடன் காலிப்பணியிடம் கணக்கிடப்பட்டு ஆசிரியர்கள் பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
  தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்புகளுக்கு முதல்கட்ட திருப்புதல் தேர்வு அறிவிப்பு தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல்கட்ட திருப்புதல் தேர்வுக்கான தேதியை தேர்வுத்துறை செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பால் இந்த கல்வியாண்டிற்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்த நிலையில், அடுத்தாண்டு மே மாதத்தில் பொதுத் தேர்வுகள் கட்டாயம் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், தமிழக தேர்வுத்துறை வெளியிட்ட செய்தியில், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரையும், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 20ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரையும் முதல்கட்ட திருப்புதல் தேர்வுகள் நடைபெறும்.
  தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 2022-ம் ஆண்டில் டிஎன்பிஎஸ்சி மூலமாக 12,263 பணியிடங்களுக்கு ஆள் தேர்வு: குரூப்-2, குரூப்-4 பதவிகளில் மட்டும் 11,086 காலி இடங்கள் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் டிஎன்பிஎஸ்சி மூலம் 2022-ம் ஆண்டு 12,263 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் குரூப்-2,குரூப்-2ஏ, குரூப்-4 பதவிகளில் மட்டும் 11,086 காலி இடங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் பணியாளர்கள், அலுவலர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலமாக தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்காக டிஎன்பிஎஸ்சி அவ்வப்போது போட்டித் தேர்வுகளை நடத்தி, தகுதியான நபர்களை தேர்வு செய்துஅரசு துறைகளுக்கு வழங்குகிறது. ஓராண்டில் எந்தெந்த அரசு பணிகளுக்கான தேர்வு அறிவிக்கை எப்போது வெளியிடப்படும், எப்போது தேர்வு நடக்கும், தேர்வு முடிவுகள், நேர்காணல் எப்போது நடைபெறும் என்ற விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வுக் கால அட்டவணையை (Annual Planner) டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அரசு பணியில் சேர விரும்பும் இளைஞர்கள் போட்டித் தேர்வுக்கு முன்கூட்டியே திட்டமிட்டு படிப...
  குரூப் 4 பாடத்திட்டம் விரைவில் வெளியீடு - TNPSC தகவல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வு தேர்வு குறித்த திருத்தப்பட்ட எவ்வித பாடத்திட்டத்தையும் இதுவரை வெளியிடப்படவில்லை என தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழ்மாெழியில் தகுதிப் பெற்றால் மட்டுமே பணியில் கலந்துக் கொள்ள முடியும் என அறிவித்தது. மேலும் தமிழ்மாெழியில் 40 மதிப்பெண்கள் பெறுபவர்கள் மட்டுமே தகுதிப்பெற்றர்களாகவும் அறிவிக்கப்படும் என தெரிவித்தது. இந்த நிலையில் குரூப்-4 தேர்வில் முந்தைய ஆண்டு பழைய பாடத் திட்டத்தில் பொது ஆங்கில பாடம் இடம்பெற்றது . அரசு கொண்டு வந்துள்ள புதிய மாற்றத்தின் அடிப்படையில் குரூப் 4 தேர்வில் பொது ஆங்கில பாடம் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பழைய பாடத்திட்டத்திலிருந்து புதிய பாடத்திட்டம் எவ்வாறு மாறுபடும் என்பதை சுட்டிகாட்ட பழைய பாடத்திட்ட முறை இணையதளத்தில் இணைக்கப்பட்டு இருந்தது. பொது ஆங்கில பாடம் மீண்டும் கொண்டுவரப்பட்டதா என்கிற குழப்பம் தேர்வர்களுக்க்கு ஏற்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரி ஒருவர் கூறும்போது, இனைய...
  புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் குரூப் 'பி', 'சி' வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி? மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவமனையில் நிரப்பப்பட உள்ள குரூப் 'பி', 'சி' பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்.Admn-I/DR/I(1)2021 பணி: Medical Laboratory Technologist(Group-B) காலியிடங்கள்: 12 சம்பளம்: மாதம் ரூ. 35,400 தகுதி: Medical Laboratory Science-இல் இளநிலை பட்டம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். பணி: Junior Administrative Assistant காலியிடங்கள்: 08 சம்பளம்: மாதம் ரூ.19,900 தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு ஆங்கிலத்தில் 35 வார்த்தைகளும், இந்தியில் 30 வார்த்தைகளும் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். பணி: Junior Administrative Assistant காலியிடங்கள்: ...
  B.Ed கல்லுாரி ஆசிரியர்களின் தேர்வு பணிக்கு புது கட்டுப்பாடு. பி.எட். கல்லுாரி ஆசிரியர்களின் தேர்வு பணிக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப் பட்டு உள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை கட்டுப்பாட்டில் பி.எட். பட்டப்படிப்பை நடத்தும் 650க்கும் மேற்பட்ட கல்வியியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவற்றில் அவ்வப்போது ஆசிரியர்களை மாற்றி மாற்றி நியமிப்பதால் தேர்வு பணிகளில் சுணக்கம் ஏற்படுகிறது. மேலும் மாணவர்களின் விடைத்தாள்களை திருத்துவதிலும் நம்பகத்தன்மை இல்லாத சூழல் நிலவுகிறது. இதை கருத்தில் கொண்டு பி.எட். கல்லுாரிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு பிரிவு பொறுப்பு அதிகாரி கோவிந்தன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பு அங்கீகாரம் பெற்றுள்ள கல்வியியல் கல்லுாரிகள் தங்கள் நிறுவனத்தில்பணி அமர்த்தியுள்ள ஆசிரியர்களின் விபரங்களை இ- - மெயில் வாயிலாக பல்கலைக்கு அனுப்ப வேண்டும். கல்லுாரிகள் அளிக்கும் ஆசிரியர் விபரங்களை ஆய்வு செய்து அவர்களின் தகுதி அடிப்படையில் மட்டுமே பல்கலையின் செய்முறை தேர்வு மற்றும் மாணவர்களின் விடை...
  குரூப் 2, குரூப் 2ஏ தேர்வில் திருக்குறள் சேர்ப்பு: டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமாமகேஸ்வரி தகவல் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வில் திருக்குறள் தொடர்பான கட்டுரை வரைதல் பகுதி சேர்க்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) செயலாளர் உமா மகேஸ்வரி வெளியிட்ட அறிவிப்பு: பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அதற்கான தேர்வுத்திட்டம், பாடத்திட்டம் ஆகியவை தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டன. கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வு பாடத் திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் (விரிந்துரைக்கும் வகை). கட்டாயத் தமிழ்மொழித் தகுதித் தேர்வு பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் (கொள்குறிவகை). கட்டாயத் தமிழ்மொழித் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் (கொள்குறிவகை) வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் விரிந்துரைக்கும் வகை தமிழ் மொழித் தகுதித்தேர்வில் (குரூப் 2, குரூப் 2ஏ உட்பட) திருக்குறள் தொடர்பான கட்டுரை வரைதல்'' எனும் பகுதி சேர்க்கப்பட்டு, திருத்தப்பட்ட பாடத்திட்ட...
Image
  தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான கட்டாய தமிழ்மொழி தகுதி தேர்வுக்கான பாடத் திட்டம்: டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியீடு தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான கட்டாய தமிழ்மொழி தகுதித் தேர்வுக்குரிய பாடத் திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் ஆகியவை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டிஎன்பிஎஸ்சி) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் அரசுப் பணிகளுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில், தமிழ்மொழித் தகுதித் தேர்வு தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அரசுப் பணி வாய்ப்புகள் அனைத்தும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு இந்த புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. தமிழ்மொழி தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, தேர்வர்களின் இதர விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. குருப்-4 தேர்வில் மட்டும் தமிழ்மொழி தகுதித் தேர்வில் எடுக்கும் மதிப்பெண், தரவரிசைப் பட்டியலுக்கு கணக்கில்கொள்ளப்படும். இதர போட்டித் தேர்வுகளுக்கு தமிழ்மொழித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதும். குருப்-1, குருப்-2 மற்றும் 2-ஏ தேர்வுகள் உட்பட முதல்நிலைத் தேர்வு, முதன்ம...
  TET தேர்வு எழுத காத்திருப்போர் கவனத்திற்கு – விரைவில் வெளியாகும் அறிவிப்பு. தமிழகத்தில் கடந்த சுமார் 19 மாதங்களாக பரவி வந்த கொரோனா பெருந்தொற்று காரணமாக ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படவில்லை. இது குறித்து தேர்வு வாரிய உயர் அதிகாரி ஒருவர் விரைவில் TET தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று தகவல் வெளியிட்டுள்ளார். TET தேர்வு விரைவில்: தமிழகத்தில் கடந்த 2013ம் ஆண்டு முதல் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) மூலம் தகுதியான இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அதாவது மத்திய அரசு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்யும் விதமாக TET தேர்வை அறிமுகம் செய்தது. அந்த வகையில் TET மற்றும் CTET தேர்வு நடைமுறையில் இருந்து வருகிறது. தமிழகத்தில் TET தேர்வானது தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (TNTRB) நடத்தப்பட்டு வருகிறது. மத்திய ஆசிரியர் தகுதி தேர்வானது (CTET) மத்திய அரசு சார்பில் CBSE நடத்தி வருகிறது. TET தேர்வில் மொத்தம் 150 வினாக்கள் கேட்கப்படும், அதில் பொதுப்பிரிவினருக்கு 90 மதிப்பெண்கள் மற்றும் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 82 மதிப்பெ...
  2 ஆண்டுகளாக நடத்தப்படாத ஆசிரியர் தகுதித்தேர்வு: புதிய தேர்வு அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் ஆசிரியர்கள் தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படாததால் புதிய தேர்வுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என இடைநிலை ஆசிரியர் பயிற்சியை முடித்தவர்களும் பிஎட் பட்டதாரிகளும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். டெட்', 'சி-டெட்' தேர்வுகள் மத்திய அரசு கொண்டுவந்த இலவச, கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, பள்ளிகளில் ஒன்றாம்வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரைபணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் 'டெட்' எனப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். அதேபோல், சிபிஎஸ்இ பாடத்திட்டம் உள்ள மத்திய அரசு பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், நவோதயா பள்ளிகளில் பணியாற்ற சி-டெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி அவசியம். சி-டெட் தேர்வைமத்திய அரசு சார்பில் சிபிஎஸ்இ நடத்தி வருகிறது. தமிழகத்தில் டெட் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது. டெட் தேர்வில் மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு அப்ஜெக்டிவ் முறையில் வினாக்கள் இடம்பெ...
  அர்ச்சகர்களுக்கான பயிற்சி பள்ளியில் ஆசிரியர் நியமனம்: இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு.   திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சைவ அர்ச்சகர்களுக்கான பயிற்சி பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆகம ஆசிரியர் தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் கடந்த மானியக் கோரிக்கையின் போது சாதி வேறுபாடின்றி அர்ச்சகர்களை உருவாக்கும் இந்து சமய அறநிலையத்துறையின் ஆறு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் ரூபாய் 1 கோடியே 50 இலட்சம் செலவில் மேம்படுத்தப்படும் என்று அறிவித்தார்கள். அந்த தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்களில் உரிய பயிற்சியும், தகுதிகளும் உடைய இந்துக்களில் அனைத்து சாதியனரும் சாதி வேறுபாடின்றி அர்ச்சகராக நியமனம் பெறுவதற்கு மேற்கண்ட அறிவிப்பின்படி சைவ, அர்ச்சகர் ஓராண்டு சான்றிதழ் பயிற்சி வழங்கும் பொருட்டு பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆகம ஆசிரியர் பணியிடங்களில் நியமனம் பெற உரிய சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பிக்கலாம் என்று துறை...
Image
  தகுதித்தேர்வு நிபந்தனையால் ஆயிரம் ஆசிரியர்கள் கவலை.   தமிழகத்தில் அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வரும் சுமார் ஆயிரம் ஆசிரியர்கள் , தகுதி தேர்வு நிபந்தனையால் பதவி உயர்வு ஊக்க ஊதியம் , ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு , பணிப்பதிவேடு தொடக்கம் , பணிவரண்முறை செய்தல் போன்ற வழக்கமான நடைமுறைகள் இல்லாமல் வேதனையில் உள்ளனர்....
ஆதி திராவிடர் நலத் துறை பள்ளி ஆசிரியர்களுக்கு 28.12.2021 மற்றும் 29.12.2021 ஆகிய நாட்களில் இடமாறுதல் கலந்தாய்வு நடைபெறுகிறது - அரசு அறிவிப்பு!!! செய்தி வெளியீடு எண் :1373 நாள் : 20.12.2021 செய்தி வெளியீடு  2021-2022 ஆம் கல்வி ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் | நல மேல்நிலைப்பள்ளி / உயர்நிலைப்பள்ளி / நடுநிலைப்பள்ளி / ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள், கணினி பயிற்றுநர், உடற்கல்வி இயக்குநர்/ உடற்கல்வி ஆசிரியர் ஆகிய பதவிகளுக்கு 28.12.2021 அன்றும், பட்டதாரி ஆசிரியர் / தமிழாசிரியர் / இடைநிலை ஆசிரியர், ஆகிய பதவிகளுக்கு மாவட்டத்திற்குள்ளும் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் 29.12.2021 அன்றும் காலை 10.00 மணி அளவில் அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பொது மாறுதல் கலந்தாய்வு on-line மூலம் பணியிட மாறுதல் கோரி பதிவு செய்து விண்ணப்பித்தவர்கள் மட்டும் on-line கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை -9
Image
  அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதால் மாணவர்களின் விகிதாச்சாரத்துக்கேற்ப ஆசிரியர் பணி நியமனம் மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மாநாட்டில் ஸ்டாலின் உரை தமிழகத்தின் நிதி நிலைமை சீரான பிறகு, அரசு ஊழியர்கள் கேட்காமலேயே அவர்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித் தரும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் 14-வது மாநில மாநாடு சென்னை மாதவரத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் பேசியதாவது: நாங்கள் ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள்தான் ஆகிறது. அதற்குள் அரசு ஊழியர்களுக்கு ஏராளமான திட்டங்கள் செய்து தரப்பட்டுள்ளன. கருணை அடிப்படையிலான நியமனங்கள் குறித்து தற்போது நடைமுறையில் உள்ள தெளிவின்மையை சரிசெய்யும் வகையில் உரிய வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதால் மாணவர்களின் விகிதாச்சாரத்துக்கேற்ப ஆசிரியர் பணி நியமனம் மேற்கொள்ளப்படும். அரசின் தற்போதைய நிலைமையை நீங்கள் உணர வேண்டும். ரூ.5 லட்சம் கோடி கடனில் இருக்கிறோம். தமிழகத்தின் நிதி நிலைமை விரைவில் சீராகும் என்ற நம்பிக்கை இருக்கிறத...
 " புகாரில் சிக்கிய ஆசிரியர்களுக்கு புரமோஷன் கிடையாது" - பள்ளிக்கல்வி துறை அதிரடி ஆர்டர்! தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வை புதிய விதிகளின்படி நடத்த பள்ளிக்கல்வி துறை முடிவு செய்துள்ளது. அந்த வகையில் அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணிக்கான பதவி உயர்வு பட்டியலைத் தயாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி பதவி உயர்வுக்கு ஆசிரியர்கள் பட்டியல், துறை இயக்குநரகத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளன. அந்தப் பட்டியலை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில், ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளான ஆசிரியர்கள், புகார் மீதான விசாரணை நிலுவையில் உள்ளவர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது கண்டறியப்பட்டது. இதையடுத்து, புகாரில் சிக்கியவர்களை பதவி உயர்வு பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கடிதத்தில், "பதவி உயர்வு பட்டியலில் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானவர்களின் பெயர்களை விடுவி...
  புதிய ஆசிரியா்கள் ஒரே பள்ளியில் 8 ஆண்டுகள் கட்டாயம் பணியாற்ற வேண்டும்: இடமாறுதல் விதிமுறைகள் வெளியீடு இனி புதிதாக பணி நியமனம் செய்யப்படும் ஆசிரியா்கள் எட்டாண்டுகள் கட்டாயம் ஒரே இடத்தில் பணிபுரிந்து இருக்க வேண்டும். அதன் பின்னா் அவா்கள் பணியிட மாறுதலில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவா் என ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வுக்கான விதிமுறைகள் அடங்கிய அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் காகா்லா உஷா வெளியிட்ட அரசாணை: அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்களின் நலனுக்காக ஆண்டுதோறும் பொது மாறுதல் நடத்தப்பட்டு வருகிறது. இட மாறுதல்களை ஒளிவுமறைவின்றி 2021-2022- ஆம் கல்வி ஆண்டு முதல் நடத்த பொது மாறுதல் கலந்தாய்வு கொள்கை வகுக்கப்பட்டு, வெளிப்படையாக நடைமுறைப்படுத்தப்படும் என சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. பள்ளிக்கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் உள்ள மாணவா்கள்-ஆசிரியா்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஆகஸ்ட் 1ஆம் தேதி ஆசிரியா்கள் - மாணவா்கள் விகிதாசார அடிப்படையில், காலிப்பணியிடங்கள் நிா்ணயம் செய்யப்பட வேண்டும். ஆசிரியா் பொது மாறுதல் கலந்தாய்வு மே மாதம்...
  TNPSC பெண்களுக்கான மிக முக்கிய அறிவிப்பு.. உடனே பாருங்க..!!!! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) முன்னதாக ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரியில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது. இந்த தேர்வில் முற்றிலும் பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே பங்கேற்க இயலும். தற்போது அது குறித்த தகவல்களை வலைத்தளத்தில் அறியலாம். தேவையான விவரங்கள்: 1. விண்ணப்பதாரர்கள் 7-ம் வகுப்பு படிப்பவராக அல்லது 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும். 2. விண்ணப்பதாரர்கள் வயது 01.07.2022 ஆம் தேதி கணக்கீட்டின்படி குறைந்தபட்சம் 11 1/2 முதல் அதிகபட்சம் 13 வயது வரை இருக்கலாம். 3. அதாவது 02.07.2009 அன்று முதல் 01.01.2011 அன்று வரை உள்ள காலகட்டத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும். 4.பதிவாளர்களுக்கான முதற்கட்டமாக எழுத்துத் தேர்வு வரும் 18.12.2021 அன்று நடைபெற உள்ளது. 5. இந்த TNPSC RIMC தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும். 6. அதில் தேர்ச்சி பெற்றோருக்கு அடுத்த கட்டமாக நேர்காணல் சோதனை நடைபெறவுள்ளது. 7. நேர்காணல் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும். 8. தேர்வு கட்டமாக General Candidates 600 ரூ...
  அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களின் கவனத்திற்கு.! பொது மாறுதல் குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பு.! அரசு ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு குறித்து முக்கிய அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை செயலாளர் வெளியிட்டுள்ளார். இது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் வெளியிட்ட அறிவிப்பில்; அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் நலனுக்காக ஆண்டுதோறும் பொது மாறுதல் நடத்தப்பட்டு வருகிறது. இப்போது மாறுதல்களை ஒளிவுமறைவின்றி 2021-22 ஆம் கல்வி ஆண்டு முதல் நடத்திட பொது மாறுதல் கலந்தாய்வு கொள்கை வகுக்கப்பட்டு வெளிப்படையாக நடைமுறைப்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. பள்ளிக்கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் உள்ள மாணவர்கள் ஆசிரியர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஆகஸ்ட் 1-ம் தேதி ஆசிரியர்கள் – மாணவர்கள் விகிதாச்சார அடிப்படையில் காலிப்பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மே மாதம் நடத்தப்பட வேண்டும். குழந்தைகளுக்கான கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையிலும், ஆசிரியர் மாணவர்கள் விகிதாச்சார அடிப்படையிலும் கல்வித் தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் உள்ள...
  10, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எப்போது?..அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் திருவாரூர் மாவட்ட நூலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 2006ல் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது இந்த நூலகத்தை திறந்து வைத்தார். இங்கு 2 லட்சம் புத்தகங்கள் உள்ளது. 16,000 வாசகர்கள் உள்ளனர். 10 ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சியில் எந்தவித பராமரிப்பும் இல்லாமல் இருந்து வந்தது. பள்ளி கல்வித்துறை நிதியிலும், எம்எல்ஏ நிதியிலும் இங்கு பராமரிப்பு பணிகளை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். நீட் தேர்வு தொடர்பாக தொடர்ந்து சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். 2,774 முதுகலை ஆசிரியர்கள் நியமனம் செய்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடத்திய பின்னர் தான் காலிப்பணியிடம் குறித்து தெரியவரும். விரைவில் கலந்தாய்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு வரும் ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் ரிவிஷன் டெஸ்ட் நடத்தப்படும். அதன் பின்னர் முடிக்கப்பட்டுள்ள பாடங்களை கணக்கில் கொ...
  ஒமைக்ரான் அச்சுறுத்தல்.. பள்ளி வகுப்புகள் குறித்து 25-ம் தேதி முக்கிய அறிவிப்பு - அமைச்சர் அன்பில் மகேஷ் ஆசிரியர்கள் பணி நியமனம் தொடர்பாக அறிவிப்பு விரைவில் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். ஒரு வார காலத்திற்குள் ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. அதன் பின்னர் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 
Image
  TRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான வினாத்தாளை பதிவிறக்கம் செய்வது எவ்வாறு?     TRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான வினாத்தாள் பதிவிறக்கம் செய்தல் சார்பான செய்தி வெளியீடு! 2017-2018ஆம் ஆண்டு அரசு பல்தொழில்நுட்ப கல்லுாரி விரிவுரையாளர் நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை ( Notification ) ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 27.11.2019 அன்று வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கணினி வழித் தேர்வுகள் ( Computer Based Examination ) கடந்த 08.12.2021 முதல் 13.12.2021 வரை நடைபெற்றது.  இத்தேர்வில் பங்கேற்ற தேர்வர்கள் தமது வினாத்தாள் மற்றும் தாம் பதில் அளித்த விடைகளை பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது என தெரிவிக்கலாகிறது. Candidates who have appeared for the exam can download using the Step given below :  1. Go to : https://trbpolviewap.onlineapplication form.org/ObjectionTracker PortalWeb / loginPage.jsp  2. Enter Registration Number  3. Select Date of Birth  4. Select Date of Exam  5. Select Bat...
  ஜனவரி 5ஆம் தேதி புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு. தமிழகத்தில் ஆளுநர் உரையுடன் ஜனவரி 5-ந் தேதி காலை 10 மணிக்கு தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும் என்று சபாநாயகர் அப்பாவு பேட்டியளித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சமூக இடைவெளியுடன் கலைவாணர் அரங்கில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வந்தது.  இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால், தலைமைச் செயலகத்தில் உள்ள வளாகத்தில் ஏற்கனவே சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்ற இடத்திலேயே கூட்டத்தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காகிதம் இல்லாத தொடுதிரை வசதி பயன்படுத்தப்படும் என்று தகவல் அளிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் உரையுடன் தொடங்கும் கூட்டத்தொடரில் அடுத்து பொதுபட்ஜெட் தாக்கல் செய்யப்படும், பிறகு மானியக்கோரிக்கை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறையின் தொடர் முயற்சிகளில் கிட்டத்தட்ட 83% நபர்களுக்கு தமிழகத்தில் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 50 சதவீதத்திற்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாவ...
  சுழற்சி முறை வகுப்பு ரத்து- 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் ஜனவரி 3 முதல் இயல்பு நடைமுறைப்படி செயல்படும்  தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் 15-12-2021 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. பண்டிகைக் காலங்களில் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தற்போது அண்டை மாநிலங்களில் பரவிவரும் உருமாறிய கொரோனா- ஒமிக்ரான் வைரஸ் நோயை கருத்தில் கொண்டும் தடுப்பூசி செலுத்தும் பணியினை விரைவுப்படுத்தவும், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.   ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தின் 30-11-2021 நாளிட்ட அறிக்கையின்படி, கொரோனா நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் 31-12-2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கொரோனா நோய்த் தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும், பரவி வரும் உருமாறி...
  ஸ்கூல்ல 2 டீச்சர்தான் இருக்காங்க.. மாணவி கொடுத்த புகார்.. ஆக்‌ஷனில் இறங்கிய மாவட்ட ஆட்சியர் மாணவி கொடுத்த புகாரையடுத்து மாவட்ட ஆட்சியர் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியம் பூங்குளம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை சுமார் 190 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் 9 ஆசிரியர் தேவைப்படும் இப்பள்ளியில் 2 ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். அதிலும் ஒருவர் தலைமை ஆசிரியராக உள்ளார். எனவே 190 மாணவ மாணவிகளுக்கு இரண்டு ஆசிரியர்களால் போதிய கல்வி கற்றுத்தர முடியவில்லை எனக் கூறியும் உடனடியாக ஆசிரியர்களை பணி அமர்த்த ஆவணம் செய்ய வேண்டும் எனவும் ஐந்தாம் வகுப்பு மாணவி சாதனா இன்று காலை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். வேண்டும் வேண்டும் ஆசிரியர் வேண்டும் என்ற பதாகையை கையில் ஏந்திய படி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனுக்கொடுத்தார். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் பள்ளிக்கு வந்து ஆய்வு செய்வதாக வாக்குறுதி அளித்தார். இதனையடுத்து உடனடியாக பூங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக...
  அரசு பள்ளிகளில் 31-ந்தேதிக்குள் பாலியல் புகார் பெட்டி அமைக்க வேண்டும்- பள்ளிக்கல்வித்துறை உத்தரவு தமிழகத்தில் பள்ளிகளில் தற்போது பாலியல் புகார் எழுந்து வருகிறது. இதையடுத்து பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்புக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் 37 ஆயிரத்து 391 அரசு பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் வருகிற 31-ந்தேதிக்குள் பாலியல் புகார் பெட்டிகளை அமைக்குமாறு பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர் இரா.சுதன், முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் 2021-2022-ம் கல்வி ஆண்டில் மாணவர்களின் ஆரோக்கிய நலனுக்காக 37 ஆயிரத்து 391 அரசு பள்ளிகளுக்கும் தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.7.46 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதியை பள்ளிகளில் பாலியல் புகார் பெட்டிகள் வைப்பதற்கு பயன்படுத்திக் கொள்ள தற்போது அனுமதி தரப்படுகிறது. மேலும் அதற்கான வழிமுறைகள் வெளியிடப்படுகின்றன. அதன்படி மாணவர்கள் நலன் கருதி அனைத்து பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர் தலைமையில் மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு உருவாக்கப்ப...
 பள்ளிகளில் "மாணவர் மனசு" பாலியல் புகார் பெட்டி - பள்ளி கல்வித்துறை உத்தரவு.     "மாணவர் மனசு" என்று எழுதப்பட்ட பாலியல் புகார் பெட்டிகளை வரும் 31-ம் தேதிக்குள் பள்ளிகளில் அமைக்க வேண்டும்! 37,386 பள்ளிகளிலும் "மாணவர் மனசு" பெட்டியில் வரும் புகார்கள் மீது 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை உத்தரவு
  அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு வினாத்தாள் பரவிய விவகாரத்தில் தேர்வருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கான பணித் தெரிவு சார்ந்த தேர்வுகள் 8.12.2021 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 8.12.21 அன்றைய தேர்வு சார்பாக whatsappல் தகவல் மற்றும் தொலைக்காட்சிகளில் செய்தி வெளியாகியுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 8.12.2021 பிற்பகல் நடத்தப்பட்ட ஆங்கிலப் பாட வினாத்தாள் தேர்வு நேரம் பிப 2.00 மணி முதல் 5.00 மணி முடிந்த உடனேயே whatsappல் 5.13 மணிக்கு விடைகள் குறிப்பிட்டு வினாத்தாள் தேர்விற்கு முன்பே வெளிவந்ததாக audio messageல் தரப்பட்டுள்ளது. இதன் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தேர்வு மையத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழங்கப்படும் விளாத்தாள், ஒவ்வொரு தேர்வருக்கும் வினாக்களும், வினாக்களுக்கான விடைகளும் Randomize செய்யப்படுகிறது. ஒரு தேர்வருக்கு வழங்கப்படுவது போல பிரிதொரு தேர்வருக்கு இருக்க 100 சதவிகிதம் வாய்ப்பில்லை. ம...
  அரசு ஊழியர்களின் ஓய்வு வயது மீண்டும் 58 ஆக மாற்றம் - முதல்வரின் ஒப்புதல்? தமிழகத்தில் அரசு துறைகளில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வு வயது குறித்த பெரும் சர்ச்சைகள் கடந்த ஆண்டு முதல் நிலவி வரும் நிலையில், தற்போது இந்த பிரச்சனைக்கான தீர்வு கிடைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழக அரசு பணியாளர்கள் வழக்கமாக அவர்களின் 58 வயதில் ஓய்வு பெறுவதற்கான வரைமுறை அமலில் இருந்து வந்தது. ஆனால் கடந்த 2020ம் ஆண்டு முதல் கொரோனா பெருந்தொற்று பரவல் தமிழகத்தில் பரவி வருவதால் அரசு கொரோனா நோய் தடுப்பு நடைமுறைகளுக்காக அதிக அளவிலான நிதியை செலவிட நேர்ந்தது. மேலும், தொற்று அபாயத்தால் தொழில்களும் ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக முடங்கி இருந்தது. இதனால் தமிழகத்தில் அதிக அளவிலான நிதி நெருக்கடி ஏற்பட்டது. அரசின் பொருளாதார சிக்கலை தீர்க்கும் வகையில் பல முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன் ஒரு படியாக, கடந்த 2020ம் ஆண்டு அரசு ஊழியர்கள் ஓய்வு பெரும் வயது 58ல் இருந்து 59 ஆக மாற்றப்பட்டது. இதனால் அரசு ஊழியர்களின் ஓய்வு கால பணப்பலன்கள் கொடுக்கும் காலம் தள்ளிவைக்கப்பட்டது. அதன் பின்னர் கொரோனா இ...
  புதிய பாடத்திட்டத்துக்கு வினாவங்கி எப்போது? பெற்றோர், மாணவ மாணவியர் எதிர்பார்ப்பு புதிய பாடத்திட்டம் மாற்றிய பிறகு, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வே நடத்தாத நிலையில், விரைவில் வினாவங்கி வெளியிட்டால் தான் பயிற்சி பெற, பயனுள்ளதாக இருக்கும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, 2019ல், புதிய பாடத்திட்டம் மாற்றப்பட்டது. புளூ பிரிண்ட் இல்லாமல், முழு பாடத்திட்டத்தில் இருந்தும், கேள்விகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டு மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டது. அட்டவணை வெளியிட்டு, தேர்வு நெருங்க இருந்த நிலையில், கொரோனா தொற்று பரவியதால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால், தேர்வு தள்ளி வைக்கப்பட்டு பின் நிறுத்தப்பட்டது.கடந்தாண்டும் பத்தாம் வகுப்புக்கு, பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. இந்நிலையில் நடப்பாண்டில், கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். இதற்காக, ஹைடெக் லேப் மூலம் ஆன்லைன் வழியாக, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, வினாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.பாடத்திட்டம் குறைக்கப்பட்டதோடு, அரைய...
Image
  தமிழகத்தில ஆசிரியர் நியமனத்தை பதிவு மூப்பு  அடிப்படையில் பணி நியமனம் செய்வது  குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
  TNPSC குரூப் 2 தேர்வில் வெற்றிப்பெற்றால் என்னென்ன வேலைகளில் சேரலாம்? டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ- தேர்வுக்கான அறிவிப்புகள் பிப்ரவரி 2022-ல் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது இந்த குரூப் 2- குரூப் 2 ஏ தேர்வுகள் எழுதினால் தேர்ச்சி பெற்றால் எந்த பணிகளுக்கு அமர்த்தப்படுவார்கள். யாரெல்லாம் இந்த தேர்வை எழுதலாம். இந்த தேர்வானது எப்படி நடத்தப்படும் போன்ற விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம் டிஎன்பிஎஸ்சி குரூப் -2 கீழ் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மூன்று நிலைகளின் கீழ் தேர்வு செய்யப்படுகின்றனர். டிஎன்பிஎஸ்சி குரூப் -2 ஏ கீழ் உள்ள காலிப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றனர். தேர்வு எழுத தகுதியானவர்கள்: ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் குரூப்-2 தேர்வு எழுதலாம். என்ன வேலையில் அமர்த்தப்படுவார்கள் : சார் பதிவாளர், வருவாய் உதவியாளர், முதுநிலை ஆய்வாளர், துணை வணிகவரி அதிகாரி, சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி, உதவி தொழிலாளர் ஆய்வாளர், இளைநிலை வேலைவாய்ப்...
Image
  TNPSC 2022 - தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு 
  பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து செய்ய கோரி வழக்கு: தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு அரசு பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை என அறிவித்துள்ளதால், பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிகளுக்காக 2019ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரத்தை சேர்ந்த சிவராமன் தொடர்ந்த மனுவில், பொறியியல் படிப்பு முடித்து ஆசிரியர் பணி மீதான ஆர்வத்தால் விழுப்புரத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக்கில் விரிவுரையாளராக தற்காலிகமாக பணிபுரிந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த 2017-18ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, அந்த தேர்வை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து புதிய தேர்வுக்கான அறிவிப்பை வெளியிடுமாறு உத்தரவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் 2019ஆம் ஆண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி காலிப்பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பானை வெளியிட்டதாகவும், பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான அந்த தேர்வு நாளை (டிசம்பர் 8) தொடங்...
  2022-ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை வெளியீடு 2022ஆம் ஆண்டுக்கான் டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணையை தமிழ்நாடு பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது. சென்னையில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன், 2022ஆம் ஆண்டு நடத்தப்பட உள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வுகளின் அட்டவணையை வெளியிட்டார். அந்த அட்டவணையின்படி, 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் குரூப் 2 தேர்வுகளும், மார்ச் மாதம் குரூப் 4 தேர்வுகளும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன், 2022ஆம் ஆண்டு நடத்தப்பட உள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வுகளின் அட்டவணையை வெளியிட்டார். அந்த அட்டவணையின்படி, 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் குரூப் 2 தேர்வுகளும், மார்ச் மாதம் குரூப் 4 தேர்வுகளும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக, கரோனா பேரிடர் காரணமாக, குரூப் 2, குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் நடத்தப்படாத நிலையில், 2022ஆம் ஆண்டுக்கான குரூப் தேர்வுகளுக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து டிஎன்பிஎ...
  அரசு காலி பணியிடங்கள் குறித்து டி.என்.பி.எஸ்.சி. திட்ட அறிக்கை இன்று வெளியீடு அரசு பணிகளில் உள்ள காலியிடங்களுக்கு வரும் ஆண்டில் நடத்தப்படும் தேர்வுகள் மற்றும் புதிய விதிமுறைகள் குறித்த திட்ட அறிக்கையை டி.என்.பி.எஸ்.சி.இன்று வெளியிட உள்ளது.டி.என்.பி.எஸ்.சி எனப்படும் அரசு பணியாளர் தேர்வு வாரியம் அரசு துறைகளுக்கு ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரையிலான பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்கிறது. இதற்காக பல்வேறு தேர்வுகள் நடத்தப்படுகின்றன.மேலும் ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு புதிய பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என்ற விபரம் முன்கூட்டியே திட்ட அறிக்கையாக வெளியிடப்படும்.அதன்படி 2022ம் ஆண்டில் மேற்கொள்ள உள்ள பணி நியமனங்கள் போட்டி தேர்வுகள் மற்றும் தேர்வு விதிமுறைகள் குறித்த திட்ட அறிக்கை இன்று வெளியிடப்படும் என்று தெரிகிறது
  பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் வெளிமாநிலத்தவர்கள்.. தமிழக அரசுக்கு வேல்முருகன் முக்கிய கோரிக்கை   தமிழ்நாட்டில் காலியாக உள்ள 1,060 பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் வெளிமாநிலத்தவர்கள் பங்கேற்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது இது தொடர்பாக அந்த கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டில் காலியாக உள்ள 1,060 பாலிடெக்னிக் விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்கு தேர்வு வரும் 8 முதல் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தேர்வை, ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 140 பேர் தேர்வு எழுதுகின்றனர். தமிழ்நாடு அரசு ஒத்தி வைத்தது கடந்த 2017 ஆம் ஆண்டு, இதே பணியிடங்களுக்காக நடந்த தேர்வில், தமிழ் தெரியாத வெளி மாநிலத்தவர் பெருமளவில் தேர்வானதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி அம்பலப்படுத்தியதோடு, வெளி மாநிலத்தவரை நீக்கிவிட்டு புதிய பட்டியலை வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தது. இதனையடுத்து, வெற்றி பெற்றோருக்கு 2017 நவம்பர் 23 அன்று நடக்கவிருந்த சான்றிதழ் சரிபார்ப்பை தமிழ்நாடு அரசு ஒத்தி வைத்தது....
  6 லட்சம் அரசு பணியிடங்கள் காலி: 6 லட்சம் அரசு பணியிடங்கள் காலி: நிதியமைச்சர் பழனிவேல் அறிவிப்பு அரசு துறைகளில், ஆறு லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. முதல்வருடன்ஆலோசித்து, அரசு பணியாளர் தேர்வு, பதவி உயர்வு தொடர்பாக பல முடிவுகளை எடுக்க உள்ளோம். ஓய்வு பெறும் வயதிலும் மாற்றம் வரலாம்,'' என, தமிழக நிதி அமைச்சர்தியாகராஜன் தெரிவித்தார்.சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி: மனித வள மேலாண்மை துறை மானிய கோரிக்கையின் போது, 'தமிழ் மொழி தேர்வில் குறைந்தது, 40 சதவீத மதிப்பெண் பெற்ற வர்களுக்கு தான், அரசு பணி வாய்ப்பு வழங்கப்படும்' என்று அறிவிக்கப் பட்டது.இது குறித்து, பல விவாதங்கள் நடத்தி, சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.அரசின் பணிஇனிமேல், தமிழக அரசு பணிக்கு, எந்த தேர்வு முகமை தேர்வை நடத்தினாலும், தமிழ் புலமை, தமிழகம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.அதில், 40 சதவீத மதிப்பெண் பெற்றதால் தான், மற்ற தேர்வு தாள்கள் திருத்தப்படும்.டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் - 4' போன்ற தேர்வுகளில், ஆங்கில மொழித்தாள் நீக்கப்படும்; தமிழ் மொழித்தாள் மட்டுமே இடம் ப...
Image
பணி மாறுதல் கலந்தாய்வு மற்றும் புதிய ஆசிரியர்கள் நியமனம் குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புகள்  பள்ளிக் கல்வித்துறையின் அணைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் மாவட்டல் கல்வி அலுவலபயிற்சி மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் அவகளுக்கான ஆய்வுக்கூட்டம் 23.11.2202 அன்று சென்னை -85 , கோட்டூர்புரம் . அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது . கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கூட்டப்பொருள் சார்ந்த முக்கிய விவரங்கள் இத்துடன் இணைத்து தக்க நடவடிக்கைக்காக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும்  பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்  அனுப்பியுள்ளார். அதில் ஆசிரியர் பணி மாறுதல் கலந்தாய்வு மற்றும் புதிய ஆசிரியர்கள் நியமனம் குறித்தும் முக்கிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணைப்பு : விவாதிக்கப்பட்ட விவரங்கள் பள்ளிக்கல்வி  * Transfer Counselling சார்ந்து இந்தமாதம் இறுதியில் அரசானை வெளியிடப்படவுள்ளது இப்பணிகள் இம்மாதம் முதல் ஆரம்பிக்க எதிர்பார்க்கப்பட்டு மாத இறுதிக்குள் முடித்து புதுப்பணியிடங்கள் கோரவும் ' உத்தேசிக்கப்பட்டுள்ளது. * மாவட்டங்க...
  தமிழ்நாட்டில் அரசு காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்பும் அளவுக்கு நிதி இல்லை : பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தமிழகத்தில் அரசுப் பணிகளுக்கு நடத்தப்படும் தேர்வுகளில், தமிழ் மொழிப்பாடம் கட்டாயம் என்ற அறிவிப்பை தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்டது. இதுகுறித்து தமிழக நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, 'தமிழ்நாட்டில் இனிவரும் காலங்களில், எந்த அரசு தேர்வாக இருந்தாலும் தேர்வு எழுதுவோருக்கு அடிப்படை தமிழ் புலமை கட்டாயம் இருக்க வேண்டும். 10 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆட்சி மாற்றம் தமிழ்நாட்டில் நடந்துள்ளது. அனைவருக்குமான ஒருங்கிணைந்த வளர்ச்சி என்ற நோக்கத்தில் நம் முதலமைச்சர் தெளிவாக இருக்கிறார். தமிழ்நாட்டில் அரசு பணிகளுக்காக 14 முதல் 15 லட்சம் பேர் வரை தேர்வு செய்துகொள்ளலாம். ஆனால் தற்போது 10 லட்சத்திற்கும் குறைவானவர்களே அரசு பணியில் இருக்கிறார்கள். மீதம் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் அளவுக்கு தமிழக அரசிடம் நிதி இல்லை. அரசு தேர்வு எழுதுவோருக்கு வயது வரம்பு 2 ஆண்டுகள் தளர்த்தப்பட உள்ளது. இன்னும் ஓரி...
  4.5 லட்சம் காலியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை தமிழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள 4.5 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சிவகங்கையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட மாநாடு நடந்தது. மாவட்ட இணைச் செயலாளர் வினோத்ராஜ் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் பெரியசாமி, மாநில பொதுச்செயலாளர் செல்வம் சிறப்புரை ஆற்றினர். இதில் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு நடந்தது. மாவட்டத் தலைவராக கண்ணதாசன், மாவட்ட செயலாளராக பாண்டி, மாவட்ட பொருளாளராக மாரி, துணை நிர்வாகிகளாக மூவேந்தன், காளிதாஸ், மூகாம்பிகை, முத்துக்குமார், வினோத்ராஜா, ராமமூர்த்தி, செந்தில்வேல், முத்துராஜ் தேர்வு செய்யப்பட்டனர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர், ஊர்ப்புற நூலகங்கள், எம்ஆர்பி செவிலியர்கள், கணினி இயக்குனர்கள், கல்வித்துறை பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி பணியாற்றும் சுகாதார ஊழியர்கள், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் டிபிசி ஊழியர்கள், பொதுத்துறை பல்நோக்கு மருத்துவமனை பணி...
  புதுச்சேரியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு டிசம்பர் 6-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். ஏற்கனவே பள்ளிகளை திறக்க முடிவு செய்தபோது மழை மற்றும் வெள்ளம் காரணமாக பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது தினமும் அரை நாள் மட்டும் வகுப்புகள் நடக்கும் என்றும், விருப்பமுள்ள மாணவர்கள் நேரடி வகுப்புகளில் வந்து கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக புதுச்சேரியில் நவம்பர் 8-ஆம் தேதி முதல், ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பள்ளிகள் திறப்பு திடீரென ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
  தமிழ்நாடு இளைஞர்களுக்கு 100% வேலை, போட்டித்தேர்வுகளில் தமிழ் பாடத்தாள் கட்டாயம்: அரசாணை வெளியீடு. தமிழ்நாடு இளைஞர்களுக்கு 100% வேலை, போட்டித்தேர்வுகளில் தமிழ் பாடத்தாள் கட்டாயம் என அறிவிக்கப்பட்ட நிலையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்மொழி தகுதித்தேர்வுக்கான பாடத்திட்டம் 10ம் வகுப்பு தரத்தில் நிர்ணயிக்கப்படும். பணி நியமனத்துக்காக நடத்தப்படும் தமிழ் மொழித்தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 40 மதிப்பெண் பெற வேண்டும். தமிழ் மொழித் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களின் இதர போட்டி தேர்வுத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட மாட்டாது. குரூப் I, II, II-ஏ ஆகிய இரு நிலைகளை கொண்ட தேர்வுகளை தமிழ் மொழித் தகுதித்தேர்வு விரித்துரைக்கும் வகையில் நடத்தப்படும். குரூப் III, IV ஆகிய தேர்வுகளில் பொது ஆங்கில தாள் நீக்கப்பட்டு பொது தமிழ் மொழித்தாள் மட்டுமே மதிப்பீட்டு தேர்வாக இருக்கும். கடந்த ஆட்சியில் மின்வாரியம், பொதுப்பணித்துறை, நியமனத்தில் தமிழே தெரியாத வெளி மாநிலத்தவர்கள் பணியில் சேர்ந்ததாக புகார் எழுந்தது. தமிழ் தெரியாதவர்கள் இனி தமிழ்நாட்டில் அரசுப்பணியில் சேர்வதை தடுக்க கட்டாய தமிழ் தேர்வு ஆணை ப...
  வேலைவாய்ப்புப் பதிவை புதுப்பிக்க மேலும் 3 மாதங்கள் அவகாசம் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவினை புதுப்பிக்கத் தவறியவா்களுக்கு மேலும் மூன்று மாதங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, கடந்த 2017 முதல் 2019 வரையிலான ஆண்டுகளில் புதுப்பிக்கத் தவறியவா்களுக்கு ஏற்கெனவே மூன்று மாத கால அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த அவகாசத்தை நீட்டிக்க வேண்டுமென்ற கோரிக்கைப்படி கால அவகாசம் நீட்டித்து வழங்கப்படும் என சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கி உத்தரவு வெளியிட வேண்டுமென வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநா் தரப்பு அரசைக் கேட்டுக் கொண்டது.  இதனைக் கவனமுடன் ஆராய்ந்த தமிழக அரசு, கடந்த 2014 முதல் 2016-ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்புக்கான பதிவினை புதுப்பிக்கத் தவறியோருக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகையும், 2017 முதல் 2019 வரையில் பதிவினை புதுப்பிக்கத் தவறியோருக்கு மூன்று மாதங்கள் சிறப்பு கால அவகாசம...
Image
  PTA மூலம் தொகுப்பூதியத்தில் முதுகலை ஆசிரியர் நியமனம் - கூடுதல் அறிவுரைகள் வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு !
Image
  வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 2014 முதல் 2019 வரை புதுப்பிக்க தவறியவர்களுக்கு வாய்ப்பு வழங்கி அரசாணை வெளியீடு.   GO NO : 548 , Date : 02.12.2021 தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை - 2014 , 2015 , மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்புக்கான பதிவினை புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை மற்றும் 2017 , 2018 , மற்றும் 2019 - ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்புக்கான பதிவினை புதுப்பிக்க ஏற்கெனவே வழங்கப்பட்ட கால் அவகாசம் முடிவடைந்த நிலையில் மேலும் மூன்று மாதங்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்குதல் வெளியிடப்படுகிறது.
  பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான ஹால் டிக்கெட்.. இன்று மாலை வெளியீடு..!!!! டிசம்பர் 8ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நடைபெறும் என்று தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. இந்த தேர்வு கணினி வழி தேர்வாக 200க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தத் தேர்வில் பல குளறுபடி ஏற்பட்டதால் மூன்று முறை ஒத்தி வைக்கப்பட்டு, தற்போது டிசம்பர் 8ஆம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்தத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று மாலை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் http://trb.tn.nic.in இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.